பாதுக்கை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கம்பிட்டிய பகுதியில் மீபேவிலிருந்து இங்கிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது 79 வயதுடைய வயோதிபப் பெண் காயமடைந்துள்ள நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் ஹோமாகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஹோமாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2