பொதுத் தேர்தலுக்காக வாக்களிக்க குடும்பத்துடன் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை – கொனபொல பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகள் உட்பட தம்பதியரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் பெண் உயிரிழந்துள்ளதுடன் ஏனையவர்கள் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக இன்று (12) பிலியந்தலையில் இருந்து மித்தெனிய கிராமப் பகுதிக்கு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.