Tamil News Channel

முடக்கப்படும் சமூக வலைத்தளங்கள்…!!

social media

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸ்தானில் தடைவிதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகரம் பண்டியை முன்னிட்டு சமூகவலைத்தளங்களை ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் என அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசின் அரசாணை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டுள்ள நிலையில் அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் எனவும் அதை எதிர்த்து போராடுவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts