அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக முட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது.
பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால், அந்நாட்டில் முட்டைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, முட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பென்சில்வேனியாவில் ஒரு விநியோக மையத்திலிருந்து ஒரு இலட்சம் முட்டைகளை மர்மக் கும்பல் ஒன்று கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
இதன் மதிப்பு 40,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்த திருட்டு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.