முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் கொலை… !
கொழும்பு , வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்டவர் விற்பனை நிலையம் ஒன்றில் தொழிலாளியாக கடமையாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த விற்பனை நிலையத்தின் முதலாளிக்கும் கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவரது சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபரான 42 வயதுடைய விற்பனை நிலையத்தின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]()