2023- 2025 ஆம் ஆண்டுகளுக்கான ஐசிசி டெஸ்ட் செம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி மீண்டும் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3- 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றிதன் மூலம் 54 புள்ளிகலுடன் முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும், இந்திய அணி 26 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது.
தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுடன் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
எனினும், 22 புள்ளிகளைப் பெற்ற பாக்கிஸ்தான் அணி அதன் வெற்றி சதவீதம் குறைவாகவுள்ளதால் 6 ஆம் இடத்திலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.