முதலாவது ஸ்ட்ரோபெரி முன்மாதிரி கிராமம் நுவரெலியாவில்!!
இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி (Strawberry) செய்கை முன்மாதிரி கிராமம் நுவரெலியாவில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் உள்ள நான்கு கிராமங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி முன்மாதிரி கிராமத்தை அமைப்பதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் 50 விவசாயிகளை பயன்படுத்தி 42 காப்பக வீடுகளில் இந்த ஸ்ட்ரோபெரி உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தேவையான அனைத்து வளங்களளும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஸ்ட்ரோபெரி செடிகளை பாதுகாப்பாக பசுமைக் கூடாரங்களில் நடச்செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
![]()