November 13, 2025
முதலாவது T20 தொடரைக் கைப்பற்றிய  இலங்கை அணி
News News Line Sports Top புதிய செய்திகள்

முதலாவது T20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை அணி

Jan 15, 2024

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி 20 போட்டி நேற்றைய தினம்(14) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.​

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக சிக்கந்தர் ராசா 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில், இலங்கை அணியின் மகீஷ் தீக்சன, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, எஞ்சலோ மெத்யூஸ் 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில், சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *