இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,000 பில்லியன் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட நேற்று தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார்.
மேலும் இந்த ஆண்டிற்கான அரசு வழங்கிய வருவாய் இலக்கு 2,115 பில்லியன் ரூபாய் ஆகும். தற்போது பெறப்பட்ட வருவாயின் அடிப்படையில், இந்த இலக்கை சுங்கத் திணைக்களம் தாண்டும் வாய்ப்பு உள்ளது.
சுங்க வருவாய் வசூல் முறையின் மறுசீரமைப்புதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்தார்.



