
முதல் காலாண்டில் 13 உயிரிழப்புகளை பதிவு செய்த எயிட்ஸ்!!!
இலங்கையில் இவ்வாண்டுக்கான முதல் காலாண்டில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட புதிய எயிட்ஸ்(HIV) நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இலங்கையில் 207 எயிட்ஸ்(HIV) நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 வீத அதிகரிப்பை காட்டுகிறது.
இதற்கமைய 2024ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள எயிட்ஸ் நோயாளர்களின் ஆண்-பெண் விகிதம் 7:1 ஆக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் எயிட்ஸ்(HIV) தொடர்பான 43 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 2018ஆம் ஆண்டிலிருந்து எயிட்ஸ் நோயாளிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை தொடர்ந்து அவதானித்து வருவதாக வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நோயாளிகள் அதிகரிப்பதற்கான காரணமாக பரிசோதனை திறன் விரிவாக்கம், பாலியல் கல்வி, மற்றும் ஆபத்தான பாலுறவு நடத்தை குறித்து மக்களிடையே உள்ள மோசமான அறிவு மற்றும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமை என வைத்தியர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.