November 18, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்!
இலங்கை அரசியல் உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வழக்கின் சாட்சி விசாரணை ஆரம்பம்!

Oct 30, 2025

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்காக போலித் தகவல்கள் சமர்ப்பித்தது மற்றும் செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, டயனா கமகே தான் நிரபராதி என தெரிவித்தார்.

அதன்பின், அரச தரப்பு சட்டத்தரணி அகில தர்மதாத்து தலைமையில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஹன்சிகா குமாரசிறி அவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு, 2016 ஜூலை 14 முதல் 2020 நவம்பர் 1 வரை செல்லுபடியான வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தது மற்றும் கடவுச்சீட்டு பெறுவதற்காக பொய்யான தகவல்கள் வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *