கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற 32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் நுழைந்த சில சந்தேக நபர்கள் இவரது மனைவியின் தங்க மாலையை திருடிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த இராணுவ சிப்பாய் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் இராணுவ சிப்பாயை தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து விசாரணையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.