November 13, 2025
முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

Jul 14, 2024

முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது .

பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பண்ணாகம் அண்ணாகலைமன்றம் ஆகியன இணைந்து வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல்  முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.

நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், திருமதி யசோதா சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான ஜெயந்தன் , கௌரி காந்தன் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முகுந்தன் ,பன்னாகம் அண்ணா கலை மன்றத்தினர்,பன்னாம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் , நன்றாகப் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *