
முன்னாள் ஜனாதிபதிகள் சந்திக்க முடிவு..!
நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் வருகின்ற திங்கட்கிழமை (07) பிற்பகல் கொழும்பில் ஒரு கலந்துரையாடலுக்காக சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இவ்வாறு சந்திக்க உள்ளனர்.
மேலும், இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரிகள் மற்றும் அதற்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.