முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த ஞானசார தேரர் குழு!
தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு சந்தித்துள்ளது.
இந்த சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதியின் தங்காலையில் உள்ள தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பு முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலகொட அத்தே ஞானசார தேரர், “மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் மறக்க முடியாத ஜனாதிபதி. அவர் நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒரு மாவீரர்,” என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, “30 ஆண்டுகளாக நீண்ட கெரில்லா போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாது என்று பலர் கூறியிருந்தனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அதனை முடிவுக்குக் கொண்டு வந்தார்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
![]()