இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் அமரர் வேலுப்பிள்ளை நவரத்தினத்தின் உடலிற்கு பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்களால் நேற்றைய தினம் (12) இலங்கை தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28 ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் விபத்திற்கு உள்ளாகிய நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 09/07/2024 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரின் இறுதிக் கிரிகைகள் அன்னாரது பருத்தித்துறை தும்பளை கிழக்கு இல்லத்தில் இடம் பெற்றபோதே அமரரின் உடலிற்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்னாரது இறுதி நிகழ்வான நேற்று பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இருதயராசா, உட்பட முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பருத்தித்துறை நகரசபை முன்னாள் உப தவிசாளர் தினேஸ் தலைமையில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராசா, சட்டத்தரணி அப்பன், பருத்தித்துறை நகரசபை சபை உத்தியோகஸ்தர், தும்பளை கிழக்கு சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் அஞ்சலி உரை நிகழத்தினர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

