மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர்.
தினேஷ் குணவர்தன வடக்கிற்கு வருகை தந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாக அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தன போன்றோர் வடக்கின் வசந்தம் என்றார்கள்.
தற்போது சீன அரசின் 20 கிலோ அரிசி பொதியை வழங்கி வடக்கின் வசந்தம் ஏற்படுத்த போகிறார்களா?
வடக்கு மக்களை அன்றும் ஏமாற்றி இன்றும் ஏமாற்றுகிறார்கள்.
இலங்கையில் பிரதமராக தினேஷ் குணவர்தன இருக்கிறார் என்று வடக்கு மக்களுக்கு நேற்றே தெரியும்.
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருமளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழில் நடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு மண்ணாங்கட்டி முடிவும் எடுக்கவில்லை என்பது எமக்கு தெரியும்.
தேர்தல் நெருங்கும் போது தென்னிலங்கையில் மக்கள் எதிர்ப்பை காட்டும் நிலையில் வடபகுதிக்கு வந்து சலுகைகளையும் களியாட்டத்தையும் வழங்க முற்படுகின்றனர் – என்றார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.