January 13, 2026
முன்னேறப்போவது யார்? CSK vs LSG
News News Line Sports Top Updates புதிய செய்திகள்

முன்னேறப்போவது யார்? CSK vs LSG

Apr 23, 2024

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது நிலைகளில் உள்ளன.

ஓட்ட சராசரியின் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்திலும் லக்னோ அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இதேவேளை நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது.

இந்த வெற்றியுடன் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலாவது நிலையில் உள்ளது.

இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சுழல்பந்துவீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் புதிய சாதனை ஒன்றையும் நிலைநாட்டியிருந்தார்.

ஐ.பி.எல் கிரிக்கட் வரலாற்றில் 200 விக்கட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற ஓர் அரிய சாதனையை இவர் படைத்துள்ளார்.

இதேவேளை 2014 முதல் 2021 வரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய சஹால் 139 விக்கட்டுக்களை கைப்பற்றியதுடன் இன்று வரை பெங்களூரு அணி சார்பாக அதிக விக்கட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் இவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.

இவ்வருடத்தில் இதுவரை இவர் 13 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *