IPL தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் ஜெயன்ஸ் (Gujarat Giants ) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் ஜெயன்ஸ் (Gujarat Giants ) அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) அணி சார்பில் சாய் சுதர்சன் (Sai Sudarsan) 45 ஓட்டங்களையும் சுப்மன் கில்(Shubman Gill) 31 ஓட்டங்களையும் ராகுல் தெவாடியா (Rahul Tewatia) 22 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப்பெற்றனர்.
பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) 03 விக்கெட்டுக்களையும் ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee) 02 விக்கெட்டுக்களையும் பியூஷ் சாவ்லா(Piyush Chawla) 01 விக்கெட்டையும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் பெற்றனர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் டெவால்ட் ப்ரீவிஸ்(Dewald Brevis) 46 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா(Rohit Sharma) 43 ஓட்டங்களையும் திலக் வர்மா(Tilak Varma) 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப்பெற்றனர்.
பந்துவீச்சில் ஸ்பென்சர் ஜான்சன்(Spencer Johnson) 03 விக்கெட்டுக்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய்(Azmatullah Omarzai )மற்றும் உமேஷ் யாதவ்(Umesh Yadav) தலா 02 விக்கெட்டுக்கள் வீதம் குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) அணி சார்பில் வீழ்த்தினர்.
தொடரின் ஆட்டநாயகனாக குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) சாய் சுதர்சன் (Sai Sudarsan) தெரிவானார்.
இன்றைய நாளுக்கான போட்டியில் ரோயல் சேலெஞ்ரசர்ஸ் பெங்களூரு (Royal challengers bengluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்(Punjab kings) ஆகிய அணிகள் தற்சமயம் மோதி வருகின்றன.