நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) ஆகிய அணிகள் அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பாக சஜீவன் சஜனா (Sajeevan Sajana) 21 பந்துகளில் 30 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) 06 விக்கெட்டுக்களையும் ஸ்ரேயங்கா பாட்டீல்(Shreyanka Patil) மற்றும் சோபனா ஆஷா(Sobhana Asha) தலா 01 விக்கெட்டு வீதம் ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) 15 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிலக்கைக் கடந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணி சார்பாக துடுப்பாட்டத்தில் எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) 38 பந்துகளில் 40 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றார்.
பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி சார்பில் ஹேலி மேத்யூஸ்(Hayley Matthews), நாட் ஸ்கிவர்-பிரண்ட்(Nat Sciver-Brunt) மற்றும் ஷப்னிம் இஸ்மாயில்(Shabnim Ismail) தலா 01 விக்கெட்டு வீதம் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக ராயல் சேலஞ்சர்ஸ் (Royal challengers) அணியின் எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) தெரிவானார்.
இன்றைய போட்டியில் டெல்லி கெபிடல்ஸ்(Delhi capitals) மற்றும் குஜராத் ஜயண்ட்ஸ் (Gujaraath Giants) ஆகிய அணிகள் மோதவுள்ளன.