Tamil News Channel

Blog Post

Tamil News Channel > Sports > மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்..!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *