முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயதையுடைய சிறுமியினை கர்பமாக்கிய குற்றச்சாட்டில் சுதந்திரபுரம் வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 24 வயதுடைய் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார.
குறித்த சிறுமியை காதலித்து வீட்டை விட்டு கூட்டிச்சென்ற கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி நான்குமாத கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுமியின் கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.