Tamil News Channel

முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வயல்காணி ஒன்றில் 4,500 துப்பாக்கி ரவைகள் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.

வலைஞர்மடம் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் T- 56 ரக துப்பாக்கி ரவை பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்டெடுத்துள்ளனர்.

T-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கிய ஆறு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 4,500 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts