பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி இன்றைய தினம் மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் 2 மணித்தியாலங்களுக்கு குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.