மூன்றாம் நிலை சிவப்பு மண்சரிவு நீடித்த வெளியேற்ற எச்சரிக்கை..!!
நாட்டின் நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கும் வழங்கப்பட்ட ‘நிலை-3’ சிவப்பு மண்சரிவு வெளியேற்றத்திற்கான எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மண் சரிவு எச்சரிக்கை இன்று (10) மாலை 04:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவுகள்,
கண்டி மாவட்டம்: பாதஹேவஹெட, ஹரிஸ்பத்துவ, தொலுவ,தும்பனை, பூஜாபிட்டிய, கங்காவட கோரளை, பாததும்பர,அக்குரண, மினிபே, உடபலத, ஹதரலியத்த, குண்டசாலை, பன்வில, மெததும்பர, உடதும்பர, உடுநுவர, யப்தினகௌ, தெல்தோட்டை, கொடதும்பரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, கலிகமுவ, வரகாபொல, மாவனெல்ல ,யட்டியந்தோட்டை மற்றும் ரம்புக்கன DSDகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
குருநாகல் மாவட்டம்: ரிதீகம, மாவத்தகம மற்றும் மல்லவப்பிட்டிய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்ட, வில்கமுவ, லக்கல பல்லேகம, அம்பங்கங்க கோரளே, உக்குவெல, மாத்தளை, நாவுல,ரத்தோட்ட பல்லேபொல மற்றும் யடவத்த போன்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
![]()