ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று கஜ முத்துக்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை விமானப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவனல்லை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.