அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) உத்தரவிட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 வயதுடைய சிறுவனை, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹூங்கம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
29 முதல் 45 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.