மெக்ஸிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மெக்ஸிகோவில் சுமார் 200 வருடங்களின் பின்னர் பெண்ணொருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Claudia Sheinbaum மெக்ஸிகோவின் முன்னாள் நகர மேயரும் சுற்றுச்சூழல் தொடர்பான விஞ்ஞானியுமாக இருந்தார்.
இந்நிலையில், Claudia Sheinbaum-ஐ ஜனாதிபதிபோட்டியில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட Xochitl Galvez 30 வீத வாக்குகளையே பெற்றிருந்தார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மெக்ஸிகோ ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.