எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் , டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து நடனமாடுவதைப் போல் செயற்கை நுண்ணறிவு ( AI ) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் எங்களை வெறுப்பவர்கள் இதனை AI எனச் சொல்லக்கூடும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் ஸ்டேயிங் அலைவ் என்ற பாடலுக்கு எலான் மஸ்க்கும், டொனால்ட் ட்ரம்பும் நடனம் ஆடுகின்றனர்.
சமீபத்தில் எலான் மஸ்க் உலகத் தலைவர்கள் அனைவரும் ஃபேஷன் ஷோவில் கலந்துகொண்டால் எப்படியிருக்கும் என்பதைப் போல் ஒரு வீடியோவை செய்து அதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.