நடிகை பிரணிதா ட்ரெண்டிங் உடையில் அச்சு அசல் பொட்மை போல் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையததில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை பிரணிதா
“உதயன்”படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ்.
கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தமிழில் நடிகர் கார்த்திக், சூர்யாவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடைசியாக அதர்வா முரளிக்கு ஜோடியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் ஒரு சில படங்களில் மாத்திரமே நடித்திருந்தாலும் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார். பிரணிதா சுபாஷுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான நித்தின் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தவும் தொடங்கியுள்ளார்.
சமூக வளைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் பிரணிதா தற்போது அழகிய ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பொம்மை போல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.