நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் ஆரம்பமான சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெற்றன.
முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் இந்தியா அணி 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடிய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 49.3 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் வீரர் ஸ்டீவ் வெட்டர்பேர்ன் (Steve Wedderburn) தெரிவாகியிருந்தார்.
மூன்றாவது போட்டியில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 48.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 43.4 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் வீரர் அஹமட் ஹஸ்ஸன் தெரிவாகியிருந்தார்.
இன்றைய தினம் சுப்பர் சிக்ஸ் சுற்றின் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதன் முதலாவது போட்டியில் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.
இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், மூன்றாவது போட்டியில் சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்கா அணிகளும் மோதவுள்ளன.