Tamil News Channel

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி

Australia ODI 2 169

அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் 2 ஆவது போட்டி நேற்றைய தினம் சிட்னி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கியது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பாக சீன் அப்பொட் (Sean Abbott) 69 ஓட்டங்களைப் பெற்றார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு குடகேஸ் மொடி (Gudakesh Motie) 3 விக்கட்டுக்களையும், ரொமேரியோ செபேர்ட் (Romario shepherd) மற்றும் அல்ஷாரி ஜோசப் (Alzarri Joseph) தலா 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 43.3 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் கேசி கார்டி (Keacy carty) 40 ஓட்டங்களை அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளுக்கு பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் சீன் அப்பொட் (Sean Abbott) மற்றும் ஜோஸ் ஹஸ்ல்வூட் (Josh Hazlewood) தலா 3 விக்கட்டுக்களையும் வில் சொதர்லேண்ட் 2 விக்கட்டுக்களையும் அவுஸ்திரேலிய அணி சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் சீன் அப்பொட் (Sean Abbott) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இத்தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளைய தினம் கிரிஃபித், மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts