கடந்த நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச்சட்டமூலம், கடந்த 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பெறுமதி சேர்வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க பெறுமதி சேர்வரி திருத்தசட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும் 2023ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க ஒதுக்கீட்டுச்சட்டமாகவும் நேற்று முதல் அமுலாகியது.