அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் வேகமான உயர்வு பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (25) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 302 ரூபா 58 சதமாகவும், கொள்வனவு விலை 292 ரூபா.70 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 222 ரூபா.06 சதமாகவும் , கொள்வனவு விலை 212 ரூபா 58 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325 ரூபா 47 சதமாகவும் , கொள்வனவு பெறுமதி 311 ரூபா 98 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 378 ரூபா 68 சதமாகவும், கொள்வனவு பெறுமதி 363 ரூபா 56 சதமாகவும் பதிவாகியுள்ளது.