November 18, 2025
மைத்திரியின் அதிரடி செய்தி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மைத்திரியின் அதிரடி செய்தி..!

Apr 18, 2024

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று எதிர்கொண்டுள்ள சவால்களை விட பாரிய சவால்களை, அன்று சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமை நீக்கப்பட்ட போது எதிர்கொண்டது.

ஒவ்வொருவரும் பிரிந்து சென்று தனிக்கட்சிகளை ஆரம்பித்த போது, நாம் அவருடன் தனிப்பயணம் சென்று வெற்றி பெற்றோம்.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அமைச்சரவையிலிருந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட இரு அமைச்சர்களை பதவி நீக்கினார்.

அதன் பின்னர் எனது ஆட்சியிலேயே அவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. எனது ஆட்சியின் பின்னர் அமைச்சரொருவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். இவற்றை மறக்க முடியாது.

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *