ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளமை அரசியலமைப்பை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அத்துடன், ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என குறித்த மன்னிப்பை இன்று (06.06.2024) ரத்து செய்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் வளாகத்தில் இவோன் ஜோன்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா கைது செய்யப்பட்டார்.
பின்னர், 2012 ஆண்டின் ஆரம்பத்தில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் குறித்த குற்றவாளி விடுவிக்கப்பட்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் குறித்த ஜனாதிபதி மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயலெனவும் அது செல்லாது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.