February 11, 2026
மொட்டுவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் புதிய கூட்டணி..!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

மொட்டுவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களின் புதிய கூட்டணி..!

Aug 19, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் என்ற வகையில் ஆதரவளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (18) கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்;

அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மொட்டு போன்று மேலும் சில கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இரண்டு வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு முன்னுக்கு வந்த நாடு, தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை மேலும் பாதுகாப்பதற்கும் முன்னெடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். இப்போதே உள்ளூராட்சி முதல் பாராளுமன்றம் வரை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்த்து வருகின்றனர். இதனால் அடுத்த தேர்தலில் வேட்புமனு கிடைக்காமல் போய்விடுமோ என்று யாரும் பயப்பட வேண்டாம். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். புதிய அரசியல் சக்தியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்களுக்கு எனது முழு ஆதரவையும் ஆசிகளையும் வழங்குகிறேன்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *