மொனராகலை மாவட்டத்தின் செவனகல சந்தி, கினிகல்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) இரவு செவனகல சந்தியிலிருந்து கினிகல்பலஸ்ஸ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் செவனகல பிரதேசத்தை சேர்ந்த 35 வயது மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் எடுத்துவருகின்றனர்.