ஒரு தொலைபேசியில் இணையம் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இன்டர்நெட் இல்லாவிட்டால் தொலைபேசி பாவிப்பதே பிரயோசனமற்றது என்று எண்ணம் தோன்றிவிடும்.
நாம் ஒரு வரையறைக்குள் டேட்டாவை பயன்படுத்தினோம் என்றால், குறிப்பிட்ட சில நாட்கள் வரையில் இணையச் சேவை கிடைக்கும்.
அதுவே கொஞ்சம் அதிகமாக பயன்படுத்திவிட்டால் விரைவாக முடிந்துவிடும்.
அதன்படி டேட்டாவை நாள் முழுவதும் எப்படி சரியாக பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.
தொலைபேசியில் இணையத்தைப் பயன்படுத்தும்போது, ஆட்டோ அப்டேட்டை ஓஃப் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் செயலிகளுக்கான அப்டேட்கள் வரும்பொழுது அது தானாகவே அவற்றின் அப்டேட்களை எடுக்கத் தொடங்கும். இதன்போது டேட்டா சீக்கிரமாக தீர்ந்துவிடுகிறது.
உங்கள் தொலைபேசியில் டேட்டா சேவர் என்ற அம்சம் இருக்கும். இதனை பயன்படுத்தும்போது உங்கள் செயலிகளின் டேட்டா உபயோகம் கட்டுக்குள் இருக்கும்.
டேட்டா வரம்பு என்ற அம்சமும் உங்கள் டேட்டா செலவை நிர்ணயிக்க உதவும்.