உண்மையிலேயே நம்முடைய மொபைல் போன் அதிகமாக பயன்படுத்தி அது பழையதாகும் போது அதனுடைய பேட்டரி திறனும் குறைகிறது. ஆனால் நாம் மொபைல் போன் வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே பேட்டரி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருகிறது என்றால் போனின் அமைப்பில் அல்லது நாம் சார்ஜ் செய்யும் முறையிலும் ஏதோ தவறு உள்ளது என்று பொருள். அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்த்தால் .
இன்றைய நவீன போன் பேட்டரியில் லித்தியம் மற்றும் அயன் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வாழ்நாள் ஆனது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை வரும். கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் பேட்டரி திறன் ஆனது 20% வரை குறைந்து விடும்.
நமது போனை முழுமையாக சார்ஜ் செய்த பின்பு அதன் பேட்டரி 20%க்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு, அதனை மீண்டும் சார்ஜ் செய்வதும், அவ்வாறு சார்ஜ் போட்ட பின்பு அடிக்கடி அதனை சார்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
உங்களுடைய மொபைல் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டும் எனில் அதன் பேட்டரி சதவீதமானது 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது 80 சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கும்போது சார்ஜில் போடக்கூடாது.
ஏனெனில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படும் பேட்டரிகள் அடிக்கடி முழுமையாக சார்ஜ் செய்வது கூடாது. அவ்வாறு அடிக்கடி முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் அவை சூடாகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
அதேசமயம் பேட்டரியின் சதவீதம் பூஜ்ஜியத்திற்கு வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பூஜ்ஜியத்திற்கு வரும் வரை நாம் மொபைலை சார்ஜ் போடாமல் இருந்தால் அவை பேட்டரி திறனை குறைத்து விடும். எனவே முடிந்த அளவு மேலே கூறிய அளவீட்டிலேயே நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும்.