மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கத்தில் தாக்குதலை மேற்கொண்ட பின்னர் உக்ரைனை நோக்கி சென்றுகொண்டிருந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இசைநிகழ்ச்சி அரங்க தாக்குதலை காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ள புட்டின் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரனை நோக்கி தப்பிச்சென்றுகொண்டிருந்தவேளை கைதுசெய்யபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் உக்ரைன் புட்டின் தெரிவித்திருப்பதை தகவலை நிராகரித்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் உக்ரைனிற்கு சென்றுகொண்டிருந்தார்கள் என தெரிவி;ப்பது அவர்கள் முட்டாள்கள் அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிப்பதை போன்றது என உக்ரைனின் புலனாய்வு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதலிற்கு உக்ரைன் காரணம் என தெரிவிப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி முயல்வதை உக்ரைன ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.