மொரந்துடுவ – பண்டாரகம வீதியில் உள்ள தெல்கட சந்தியில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்தில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் மோதி 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவை சங்கீத் செவன அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள தனியார் உணவு உற்பத்தி நிறுவனமொன்றில் பணியாற்றியவரே இவ்வாறு உயிரிழ்ந்துள்ளார்.
குற்றித்த இளைஞர் பாணந்துறையில் பிறந்தநாள் விழாவொன்றில் உதவி சமையற்காரராக வேலை செய்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post Views: 2