அண்மையில் இடம்பெற்ற “ரணிலிடம் கேளுங்கள்” நிகழ்ச்சியின் போது சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி யானைக்கு பதிலாக காஸ் சிலிண்டரை ஏன் சின்னமாக தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தேன். அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கருத்து இன்று வலுவாக உள்ளது.
இதனடிப்படையில் நமது அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு குழுக்களுடன் இணைந்து பணியாற்றியதால், சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஒரு சுயேச்சை வேட்பாளர் எந்த சின்னத்தையும் தேர்வு செய்யலாம், இந்த நேரத்தில் கேஸ் சிலிண்டரே மிகவும் பொருத்தமான சின்னம் என்று நான் உணர்ந்தேன். என அவர் கூறியிருந்தார்.
மேலும் மற்றவர்கள் தீர்க்கத் தவறிய பொருளாதார நெருக்கடியை தாம் வெற்றிகரமாக தீர்த்தாலும், தேவையான பொருளாதார மாற்றங்களை பாதியில் நிறுத்தினால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது குடிமக்கள் தமது எதிர்காலத்தை கவனமாக கருத்திற் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.