திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (21) மாலை வயலை பாதுகாப்பதற்காகசென்றவரை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவ இடத்திற்க்கு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டதோடு, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல பொலிஸார் முன்னெடுத்துருந்தனர்.
மேலும் இப்பகுதியில் பாதுகாப்பற்ற யானை வேலி அமைக்கப்பட்ட நிலையிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் பாதுகாப்பான வேலிகளை அமைக்கவும் விவசாய நிலங்களை இரவு வேளைகளில் பாதுகாக்கவும் முறையான தரமான வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றோம் என விவசாயிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.