எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்றைய தினம் (18) கூடியுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.