யால சரணாலயத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை: 2 லட்சம் செடிகள் அழிப்பு!
யால தேசிய பூங்காவின் கோனகன் ஆர பகுதியில் பொலிஸார் நடத்திய நான்கு நாள் விசேட சுற்றிவளைப்பின் போது, பெரும் அளவிலான மூன்று கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொலிஸார் தெரிவித்ததின்படி, அந்தப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டன.
இந்த சட்டவிரோதப் பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட்ட சரணாலயப் பகுதியின் உள்ளே முறையே 5 ஏக்கர், 3 ஏக்கர் மற்றும் 2 ஏக்கர் என மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் பரவியிருந்தன.
சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்பட்ட மூன்று பயிர்ச்செய்கைகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
![]()