February 9, 2026
யாழில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போரட்டம்
News Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

யாழில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போரட்டம்

Dec 11, 2023

நேற்று (10) காலை அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி  கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் கவனயீர்ப்பு போரட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது எமது நிலம் எமக்கு வேண்டும்,  எமது கடல் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்றொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலை சுவீகரித்து  வரலாற்று தவறைச் செய்யாதே, மேச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


இப்போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *