தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா நேற்றைய தினம் (15) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர்.
இதில் அதிகளவிலான போட்டியாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் ஆகாய விமானம் தாங்கிய போர் விமானம் என்ற பட்டம் முதலாம் இடத்தையும், விண்வெளியில் நிலை நிறுத்திய செயற்கைக் கோள் என்ற பட்டம் இரண்டாம் இடத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.