January 13, 2026
யாழில் இன்று கடற்றொழில் அமைச்சரின் ஊடக சந்திப்பு ..!
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

யாழில் இன்று கடற்றொழில் அமைச்சரின் ஊடக சந்திப்பு ..!

May 3, 2025

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் அவர் தெரிவித்ததாவது

தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாண மக்கள் எமக்கு அமோகமான ஆதரவை தந்தார்கள். கடந்த தேர்தலை விட பாரிய வெற்றி இம்முறை கிடைக்கும்.

எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்த்து தமிழ் கட்சிகள் புலம்பி தற்போது ஊளையிடுகின்றார்கள்.

வேகமாக யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புகிறோம்.

தமிழ் மக்களுடைய தன்மானத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழேயே கட்டிக்காக்க முடியும்.

பாராளுமன்ற தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட நபர்கள் அனுர, தேசிய மக்கள் சக்தி என புராணம் பாடுகிறார்கள்.

சாக்கடைக்குள் விழுந்துள்ள தமிழ் கட்சிகள் எம்மீது சாக்கடை இருப்பதாக கூறுகிறன.

எமது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்மீது அவதூறு பரப்பினார்கள்.

அனுர காலடி எடுத்து வைக்க விடமாட்டோம் என்கிறவர் யாழில் கால் வைக்க விடமாட்டோம் என்கிறார்.

கபிலன் மீது வழக்கு போடுகிறார்கள்.

வழக்கு போடுவதை தவிர அவருக்கு எதுவும் தெரியாது. தோல்வி பயத்தில் இவ்வாறு கூறித் திரிகிறார்கள்.

கபிலன் தனியாள் அல்ல. கபிலனுடன் விளையாடுவது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் விளையாடுவது போன்றது.

இதுவரை இருந்த யாழ் மாநகர மேயர்கள் குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்திற்கு எதுவும் செய்யவில்லை.

நாங்கள் ஆளுங்கட்சி என்பதை மறந்துவிடக்கூடாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி எம்மிடம் உள்ளார்.

பேச்சு சுதந்திரத்தை

ஊடகங்கள், சமூக வலைத்தள எழுத்தாளர்கள், யூடியூப்பர்கள்

தமிழை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

புலிகளின் கனவை நாங்கள் நனவாக்குவோம்.

புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும்! இவ்வாறு தெரிவித்தார்.

(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *