Tamil News Channel

Blog Post

Tamil News Channel > புதிய செய்திகள் > யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

யாழில் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்தர் ஒருவர் மரணம்!

யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (20) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மது மற்றும் புகை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் உடல் சுகயீனம் ஏற்பட்டு இரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் காலை 5 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி பி.ப 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சியங்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *